வங்கிப் பங்குகளில் அருமையான வாய்ப்புகள் தென்படுகின்றன... புல்ஸ்ஸ்ட்ரீட் டி.ஏ.விஜய்  நேற்றைய ஆர்பிஐயின் 'ரேட் கட்'டில் எவ்வித மாற்றமும் இல்லை என்ற அறிவிப்பு தொடர்ந்ததை அடுத்து வங்கிகள் தங்களது டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தை கணிசமாக குறைக்க ஆரம்பித்து விட்டார்கள்.எஸ்பிஐ ஐசிஐசிஐ எச்டிஎஃப் போன்ற வங்கிகள் தங்களிடம் டெபாசிட் செய்பவர்களுக்கான பிக்சட் டெபாசிட்டுகளின் மீதான வட்டியை குறைப்பது என்று நடவடிக்கை எடுத்து விட்டார்கள்.
 இதனால் வங்கிகளுக்கு வருமானம் அதிகரிக்கலாம்.வங்கி என்பதே டெபாசிட்டுகளின் மீதான குறைந்த வட்டியைக் கொடுத்து அந்த டெபாசிட் பணத்தை கூடுதல் வட்டிக்கு கொடுத்து வாங்கும் லேவாதேவி தொழில்தானே செய்து வருகின்றன.ஆனால் டெபாசிட்டுகளின் மீதான வட்டி குறையூம்போது மக்கள் வங்கிகளில் டெபாசிட் செய்ய விரும்பாமல் தங்கம் ஏலச்சீட்டு என்று திசை மாறிப் போக வாய்ப்பிருப்பதால் வங்கிகளுக்கு சில்லறை வியாபாரம் படுத்துப் போகும் வாய்ப்பு இருக்கிறது.இதன் காரணமாக வங்கிப் பங்குகளின் விலையூம் கணிசமாக குறைய வாய்ப்பு இருக்கிறது.
 ஆனால் இது ஒரு தற்காலிக நிலைமையே.
 எனவே மீண்டும் வங்கிப் பங்குகளில் ஒரு எழுச்சியூம் ஏற்றமும் கிடுகிடுவென வரத் தொடங்கும்.அதனால் விலை குறையப்போகிற வங்கிப் பங்குகளி;ல் இப்போது முதலீடு செய்வது நல்லது.
 சென்ற வருடம் இதே ஏப்ரல் மாதம் நாம் ஒரு ஸ்ட்ராட்டஜியை கொடுத்திருந்தோம்.அது 130 சதவீத லாபத்தை முதலீட்டாளர்களுக்கு கொடுத்திருந்தது.அதுவூம் ஏழே மாதங்களில்.
 அதாவது ஷேரில் போட விரும்புகிற பணத்தை ஏதாவது ஒரு குறிப்பிட்ட வங்கியில் பிக்சட் டெபாசிட்டில் போட்டு விட்டு அந்த டெபாசிட்டை அதே வங்கியில் அடகு வைத்து கடனாக 90 சதவீத பணத்தைப் பெற்று அந்த பணத்தைத்தான் அதே வங்கியின் பங்கில் டெபாசிட் செய்ய வேண்டும்.ஓராண்டு என்பது இலக்கு காலம்.ஓராண்டு முடிவில் வாங்கிய அந்த வங்கிப் பங்குகளை விற்று விட்டு கிடைக்கிற பணத்தைக் கொண்டு வங்கிக் கடனை அடைத்து விட்டு டெபாசிட்டை மீட்டு அதையூம் பணமாக்கி வெளியே  கொண்டு வர வேண்டும்.சென்ற ஆண்டு பிஎன்பி மற்றும் பாங்க்பரோடாவில் இதே போல செய்ததில் 130 முதல் 140சதவீதம் வரை லாபம் கிடைத்திருந்தது.
 செய்து பாருங்கள்.அசந்து போவீர்கள்.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More