Latest News

ஜெயிக்கத் தெரிந்த பணமே... -6 - புல்ஸ்ஸ்ட்ரீட் டி.ஏ.விஜய்

சற்றே யோசித்துப் பாருங்கள்.இந்த பணம் சம்பாதிப்பது மட்டும் ஏன் இத்தனை கடினமாக இருக்கிறது.ஒரு விளையாட்டு போல ஏன் சந்தோஷமாக பணம் சம்பாதிக்க முடிவதில்லை.பணம் என்பது உங்களைப் பொறுத்தவரை ஒரு வசீகரமான விஷயம்.அதுவே வேதனையான விஷயமாகவூம் ஆகிப்போயிருப்பதற்கு யார் காரணம்?
பணமா? அல்லது நீங்களா? அல்லது உங்களது மனமா?
வேறு எது காரணமாக இருக்க முடியூம்.இப்படி வாருங்கள்.கொஞ்சம் வசதியாக அமர்ந்து கொள்ளுங்கள்.இப்படி இப்போது நீங்கள் உட்கார்ந்திருக்கும்போது கூட பணம் பற்றிய ஏதாவது ஒரு சிந்தனை பின்னணியில் ஓடிக்கொண்டிருக்கிறதா அல்லது உங்களது மனம் வெற்றாக வேறு எதையாவது சிந்தித்துக் கொண்டிருக்கிறதா இல்லை சும்மா இருக்கிறதா உங்களது மனம்.
சரி எப்படி வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டும்.பணம் சம்பாதிப்பதை  பணத்தை அதிக அளவில் அடைவதை ஒரு சுகமான சுவாரஸ்யமான விஷயமாக எப்படி மாற்றிக் கொள்வது என்பதுதான் இந்த தேடலின் நோக்கம்.அதைத்தான் எனது பயிலரங்கிற்கு வருபவர்களுக்கும் சொல்லித் தருகிறேன்.
 ஒரு படத்தின் கதாநாயகன் சொல்வது போல பிடித்தமான ஒருவரைப் பார்க்கிறபோது அடிவயிற்றில் அப்படியே பட்டாம்பூச்சி பறப்பது போலிருக்க வேண்டும் என்பதையே சற்று மாற்றிப் பாருங்கள்.பணத்தை கையில் வாங்கும்போது பணத்தைப் பார்க்கிறபோது நீங்கள் அப்படி ஒரு பரவச உணர்வை பட்டாம்பூச்சி பறப்பதை சந்தித்திருக்கிறீர்களா? முதன் முதலாக சம்பளம் வாங்கும்போது நீங்கள் அப்படி நிச்சயம் உணர்ந்திருந்திருப்பீர்கள்.நான் கூட அது போல உணர்ந்தேன்.நான் மாணவப்பருவத்தில் இருந்தபோது திருச்சி வானொலியில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றதற்காக ஐம்பது ரூபாய் காசோலையை வாங்குகிற தருணத்தில் என் கைகள் ஜில்லிட்டுப் போயிருந்தன.இதயத்தின் படபப்பை நன்றாக உணர்ந்தேன்.உலகமே ஜில்லென்று இருந்தபோது வெளியே வெய்யில் கொளுத்திக் கொண்டிருந்தது.எனது முதல் வரவான அந்த காசோலையை எனக்கு தந்த திருச்சி வானாலி நிகழ்ச்சித்தயாரிப்பாளராக அப்போது இருந்தவரின் பெயர் கூட இன்னமும் ஞாபகம் இருக்கிறது.அவர் பெயர் திரு.சீனிவாசராகவன்.அவருக்கு இப்போதும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
 நீங்களும் இது போல முதல்முறையாக பணத்தை சம்பளமாகவோ சன்மானமாகவோ பெறும்போது மகிழ்ந்திருப்பீர்கள்.அதன்பின் அடுத்தடுத்து வந்த வரவின் போதோ அல்லது அடுத்தடுத்த சம்பளம் வந்தபோதே அதே பரவச உணர்வூ இருந்திருக்காது.
 இங்கே ஒரு விஷயத்தை புரிந்து கொள்ளுங்கள்.
 பணம் சம்பாதிப்பது கடினமான விஷயமாக இருப்பதற்கு ஒரே ஒரு காரணம்தான் இருக்கிறது.அந்த ஒரே ஒரு காரணத்திற்கும் காரணகர்த்தாவாக நீங்கள்தான் இருக்கிறீர்கள்.
 கார் ஓட்டுவதைப் போல கற்பனை செய்து கொள்ளுங்கள்.நீங்கள் பணம் சம்பாதிப்பது என்ற வின்னிங் போஸ்ட்டுக்கு ஏன் வரவில்லை என்றால் அதற்கான காரணம் இதுதான்.
 நீங்கள் உங்களது காரை ரிவர்ஸில் ஓட்டிக்கொண்டிருக்கிறீர்கள்.காரை ரிவர்ஸில் ஓட்டுவதா? எந்த மனிதரும் அது போல செய்ய மாட்டாரே என்று நீங்கள் நினைக்கலாம்.திரும்பவூம் சொல்கிறேன்.நீங்கள் உங்களது காரை ரிவர்ஸில்தான் ஓட்டிக்கொண்டிருக்கிறீர்கள்.
 அதெப்படி?
 அது அப்படித்தான்.இப்போது புரியூம்படி உண்மையைச்சொல்லி விடுகிறேன்.சின்ன வயதிலிருந்தே நாம் அப்படித்தான் வளர்க்கப்பட்டு போதிக்கப்பட்டு வந்திருக்கிறௌம்.அதாவது கடந்த காலத்தைப் பற்றி சிலாகித்துப் பேசுவது.அந்தக் காலத்துல நாங்க என்ன மாதிரி வாழ்ந்த பரம்பரை தெரியூமா? இப்படி சொல்வதைக் கேட்டிருக்கிறீர்களா? இப்படிச் சொல்பவர்கள் பெரும்பாலும் வாழ்ந்து கெட்டவர்களாகத்தான் இருப்பார்கள்.
 என்ன சொல்ல வருகிறேன் என்றால் உங்களுக்கு இருக்கிற கெட்டப் பழக்கம் கடந்த கால நினைவூகளில் மூழ்கிப் போவது.அதாவது காரை பின்னோக்கி ஓட்டுவது.
 அந்தக் காலத்தில் நாங்க அப்படி வாழ்ந்தேம் தெரியூமா? என்று சொல்கிற யாராவது இன்னும் பத்து வருடத்தில நாங்க எப்படி வாழப்போறௌம் தெரியூமா?இன்னும் அஞ்சு வருஷத்துல என்ன் மாதிரி கார் வாங்கப் போகிறௌம் தெரியூமா?என்று பேச மாட்டார்கள். ஆனால் சின்னப் பசங்க இது போல பேசிக் கொள்வார்கள்.அவர்களிடம் அப்படி பேசும்போது உற்சாகம் சந்தோஷம் கொப்புளிக்கும்.கண்களில் நம்பிக்கை துளிர்விட்டிருக்கும்.ஆனால் பாவம் அவர்களையூம் படி..படி என்று பாடபுத்தகத்தையூம் பரிட்சைத்தாளையூம் தின்னக் கொடுத்து பிராய்லர் கோழிகளாக்கி  விடுகிறௌம்.
 ஆக கடந்த காலத்தை அடிக்கடி நினைத்துப் பார்ப்பதை விட்டு விட்டு எதிர்காலத்தை அடிக்கடி நினைத்துப் பார்க்க ஆரம்பியூங்கள்.அப்படி எதிர்காலத்தில் இப்படி இருப்பேன்.அப்படி இருப்பேன் என்று நினைத்துப் பார்க்க ஆரம்பித்தீர்களானால் அதை உங்களது உள் மனம் உள்வாங்கிக் கொண்டு அதற்கு என்ன செய்யலாம் என்று உங்களுக்காக யோசிக்க ஆரம்பித்து விடும்.அப்படி உள் மனம் யோசிக்க ஆரம்பித்தால் அது கொடுக்கக் கூடிய யோசனை என்றைக்காவது ஜஸ்ட் லைக் தட் ஆக உங்களிடம் வந்து விழும்.
 சரி இன்றௌடு இந்த நிமிடத்தோடு கடந்த காலத்தை கட் பண்ணி விடுவோமா? இனி எதிர்காலத்தைப் பற்றியே அதாவது நிறைய பணத்தை சம்பாதிப்பதைப் பற்றியே நினைத்துப் பார்ப்போமா?
 எங்கே உங்களது காரை ரிவர்ஸ் கியரிலிருந்து முன்னால் எடுத்து டாப் கியருக்கு மாற்றுங்கள் பார்ப்போம்.http://bullsstreetdotcom.blogspot.in

Follow by Email

Recent Post