என் தேசம் என் கனவு

தொழிற்களம் வாசகர்களுக்கும் - சக பதிவர்களுக்கும் வணக்கம். 

முன்னொரு காலத்தில் "பணம் பணம் பணம் "தொடர் எழுதிய அதே சித்தூர் முருகேசன் இப்போது என் தேசம் என் கனவு  என்ற தலைப்பில் தனிப்பதிவோடு வந்திருக்கிறேன்.

முன்னர் எழுதிய தொடரில் தனிமனிதர்கள் எப்படி பணக்காரர் ஆகலாம் என்று எழுந்தியிருந்தேன். (இந்த தொடர் நூல் வடிவம் பெற்று சக்கை போடு போட்டது தெரிந்திருக்க்கலாம்)  இந்த தனிப்பதிவில் இந்தியா பணக்கார நாடாக என்ன செய்ய வேண்டும் என்பதை எழுதுகிறேன்.


ஹ.. நாட்டை பற்றிய பதிவான்னு உச் கொட்டாதிங்க பாஸ் ! நாம நல்லாருக்கனும்னா நம்மை சுத்தி இருக்கிற எல்லாருமே நல்லா இருக்கனும்.
வறுமைங்கறது உலகத்தின் எந்த மூலையிலோ சின்ன திட்டா இருந்தா கூட அது உலகம் பூரா பரவ ரெம்ப காலம் பிடிக்காது.மேலும் க்ளோபல் விலேஜ் யுகத்துல வாழறம். ஜஸ்ட் ஒரு கிரீஸ் நாட்ல பிரச்சினைன்னா அது உலகத்தையே மிரட்டற அளவுக்கு போயிருச்சு . நம்ம ரிசர்வ் பேங்க் கவர்னர் வேற 1930 போல உலக பொருளாதார நெருக்கடி காத்திருக்குன்னு சொல்லியிருக்காரு.


உண்மையில்  நாம நல்லா இருக்கனும்னா நாடு நல்லாருக்கனும். நாடு நல்லாருக்கனும்னா நாம நல்லாருக்கனும். நம்ம மோதிஜி பிரதமராகி 100 நாள் முடிஞ்ச பிறகு 2014,ஜூலை 16 ஆம் தேதி அவருக்கு ஒரு லெட்டர் போட்டேன். பிரதமர் அலுவலகம் "உங்கள் கடிதம் கிடைத்தது - இட் ஈஸ் கெப்ட் ஆன் ரெக்கார்ட்"னு பதில் கூட போட்டாங்க. அந்த லெட்டர்ல நான் தெரிவிச்சிருந்த யோசனைகள் தான் இந்த பதிவு .


இதை பாக்கெட் புக்கா போட்டு ( 4000 பிரதிகள்) தமிழ்,தெலுங்கு வி ஐ பிக்களுக்கும் , சாமானியர்களுக்கும் இலவசமா கொடுத்துக்கிட்டிருக்கன். என்ன யோசனைகளுக்கு போயிரலாமா?  


பாகம்: 1
மத்திய அரசின் பட்ஜெட்டில் முக்கிய ஒதுக்கீடே வெளி நாட்டு/உள் நாட்டு
கடன்/ கடன் மீதான வட்டி/வட்டி மீதான வட்டிக்கே செய்யப்படுகிறது .
இதற்கு ஒரு முடிவு கட்டினாலே தவிர எந்த பிரதமரும் எதையும் சாதிக்க
முடியாது. எனவே ..

1.ஜனாதிபதி-கவர்னர் பதவிகள் ரத்து. இவர்களின் பணியை சுப்ரீம் கோர்/ஹை
கோர்ட் நீதிபதிகளே செய்யலாம்.
2.ஜனாதிபதி மாளிகை/பாராளுமன்ற வளாகம்,பிரதமர் வீடு , மானிலங்களிலான
கவர்னர் மாளிகைகள் ,முதல்வர்கள் வீடு சட்டமன்ற வளாகங்கள் அனைத்தையும்
க்ளோபல் டெண்டர் அழைத்து 99 வருடங்களுக்கு லீஸ்.
(எதிர்காலத்தில் பாராளுமன்ற சட்டமன்ற கூட்டங்கள்/கலந்தாலோசனைகள்
வீடியோகான்ஃபரன்ஸ் முறையில் மட்டுமே நடக்க வேண்டும்)
3.ஸ்விட்ஜர்லாந்து வங்கி கணக்காய் இங்கும் ஒரு வங்கி துவக்கினால் வெளி
நாடுகளில் தேங்கி/தேக்கப்பட்டு கிடக்கும் கருப்பு பணம் தானாகவே நம்
நாட்டை வந்தடையும்.
4.வாகனங்களுக்கு பெட் ரோலுடன் 60:40 விகிதத்தில் எத்தனால் கலந்து உபயோகிக்க அனுமதி.
5.வாரத்துக்கு ஒரு நாளை மாசு கட்டுப்பாட்டு தினமாக அறிவித்து 52+
கேரியர்ஸுக்கு மட்டும் அனுமதி (ரயில், பஸ்) பாதுகாப்பு/மருத்துவ துறை
தொடர்பான எமர்ஜென்சி சேவை வாகனங்களுக்கு மட்டும் விதிவிலக்கு.
6.நாட்டில் உள்ள 18 வயது நிறைந்த ஒவ்வொரு ஆண் பெண்ணுக்கும் இலவச
சைக்கிள். சைக்கிள்களுக்கு சாலைகளில் மெயின் ட்ராக்.
7.பாலியல் தொழிலுக்கு சட்ட அனுமதி.

பாகம்:2
மத்திய பட்ஜெட்டில் அடுத்த பெரிய ஒதுக்கீடு பாதுகாப்பு துறைக்கு மட்டுமே.
1.பாக்கிஸ்தான்,சீனா,பங்களா தேஷ் ஆகிய நாடுகள் உரிமை கோரி வரும் பாரத நில
பாகத்தை ஐ. நா செயல்பாடுகளுக்கு மட்டும் என ஒதுக்கி அவற்றின் பாதுகாப்பை
ஐ.நா பாதுகாப்பு சபை ஏற்க ஏற்பாடு.
2.நக்சல்பாரிகளின் ஆதிகத்தில் உள்ள இந்திய மாவட்டங்களில் அரசின்
வளர்ச்சி/சமூக நல திட்டங்களை நக்சல் ஆதரவாளர்களாய் முத்திரை குத்தி
இருக்கும் மனித உரிமை கழகங்கள் செயல்படுத்துமாறு செய்தல்.

பாகம்:3
1.அரசு இயந்திரத்திலான ஊழல்/அலட்சியம்/பொறுப்பின்மையை ஒழித்தல். அரசு
நிர்வாக செலவை 50% வரை குறைத்தல்.
2.மத்திய,மானில அரசு ஊழியர்கள் அனைவருக்கும் மருத்துவ,சைக்கோ மெட்ரி
டெஸ்ட். கடந்த 10 வருடங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மீது ஒரு தேர்வு
.இவற்றில் தோற்றவர்களுக்கு கோல்டன் ஷேக் ஹேண்ட். இவர் தம் வாரிசுகளில்
தகுதி உடையோருக்கு வாய்ப்பு.
3.அரசு துறையிலான காலியிடங்களையும்/மேற்படி தேர்வுகளில் தோற்றவர்களால்
காலியான இடங்களையும் டெண்டர் முறையில் நிரப்புதல் ( தேவையான தகுதி+
அதிகபட்ச குறைந்த ஊதியம்)
4.சனி,ஞா கிழமைகள்,சுதந்திர நாள்,குடியரசு தினம் தவிர்த்த அனைத்து ஓய்வு
நாட்களும் ரத்து. வருடத்தில் 11 வருடங்கள் தொடர்ந்து பணி
புரிந்தவர்களுக்கு ஊதியத்துடன் கூடிய 1 மாத ஓய்வு .
4.ஏரி,குளங்கள்,நீர்நிலைகளை பேராசை மற்றும் சுய நலத்துடன்
ஆக்கிரமித்துள்ளவர்களின் விவரங்களை சேகரித்து ராணுவம் மூலம் மீட்டல்.
5.வாய்க்கால்களை ஆக்கிரமித்துள்ளவர்கள் அண்டர் கிரவுண்டில் தம் சொந்த
செலவில் அவற்றை நிர்மாணித்து தர உத்தரவு.
6.ஒவ்வொரு குடிமகனும் ஆன்லைன் மூலம் தனது சொந்த விவரங்களை அரசுக்கு
கிடைக்க செய்யும் ஏற்பாடு. (சமூக,பொருளாதார நிலை) .எவ்வித கிராஸ்
செக்கும் இல்லாமல் இவற்றின் அடிப்படையில் அரசு சமூக நல,முன்னேற்ற
திட்டங்களில் வாய்ப்பு.
ஆனால் தவறான தகவல் தந்தவர்களுக்கு கடும் தண்டனை உண்டு என்பதை முன்
கூட்டியே பெரிய அளவில் மக்களுக்கு தெரிவித்தாக வேண்டும்.
பிறகு அரசு தன் வேகத்தில் 3 மாதத்தில் கிராஸ் செக் செய்து போலிபயனாளிகளை
கடுமையாக தண்டிக்க வேண்டும்.
7.சாலை நிர்மாண பணிகள் பிளாஸ்டிக் கழிவுகள் மூலமே நடக்க வேண்டும். புதிய
சாலைகள் அமைப்பதை விட ரயில்வே பாதைகளை விரிவு படுத்த வேண்டும்.
8. நீதிமன்றங்கள் வருடம் முழுதும் 24 மணி நேரம் ஷிஃப்ட் முறையில் பணி
செய்யும் ஏற்பாடு.
9.மத நிறுவனங்கள் படிப்படியாக மத ரீதியிலான நடவடிக்கைகளை
குறைத்துக்கொண்டு நாட்டு முன்னேற்றத்துக்கு ஒத்துழைக்க ஏற்பாடு .
10.பிரபல புண்ணிய சேத்திரங்கள், பெரிய ஆலயங்கள்,மடங்கள் ,ப்ரேயர் ஹால்ஸ்
சோலார்/விண்ட் மில் – பயோகியாஸ் மூலம் மட்டுமே கியாஸ்/மின்சாரம்
தயாரிக்கும் ஏற்பாடு . சுற்றுப்புற ஏரியாவுக்கும் வினியோகம்.
11.உள்ளூர் காய்கறி மார்க்கெட்/மட்டன் மார்க்கெட்/பூ மார்க்கெட் எதிரில்
வங்கிகள் எஸ்.டி.டி பூத் கணக்காய் பிரத்யேக கவுண்டர் திறந்து நடை பாதை
வியாபாரிகள், சிறு வியாபாரிகளுக்கு டெய்லி லோன்.

பாகம்:4
1.நாட்டின் 10 கோடி நிருத்யோகர்களை கொண்டு சிறப்பு ராணுவம். அதன் மூலம்
நீர்வழி சாலைகள் -நதிகள் இணைப்பு .
2.கிராமங்கள் முதல் நாடு தழுவிய விவசாயிகள் சங்கம் அமைப்பு . விவசாய
நிலங்களை லீஸ் அடிப்படையில் மேற்படி சங்கங்களுக்கு அளித்து கூட்டுறவு
பண்ணை விவசாயம்.
3.மேற்படி சிறப்பு ராணுவத்தில் ஒரு பகுதியை கொண்டு விவசாய உற்பத்திகளை
பாதுகாக்க தேவையான கிடங்குகள்/கோல்ட் ஸ்டோரேஜ் , வி.உற்பத்திகளை கொண்டு
செல்ல தேவையான சாலை/ரயில் பாதைகள் நிர்மாணம்.
4.நதிகள் இணைப்பு திட்டத்தில் முதலீடு செய்யும் அன்னிய நாட்டு
நிறுவனங்களுக்கு மட்டும் இந்தியாவில் முதலீடு செய்யும் வாய்ப்பு.
5.முழுமையான மதுவிலக்கு. மது அடிமைகளுக்கு கொக்கோ கோலா மாதிரியான
மெஷின்ஸ் மூலம் அடக்கவிலைக்கே மது.
6.ஒவ்வொரு மாணவனும் தன் உடல்,மனம்,புத்தி
,குடும்பம்,சமூகம்,மானிலம்,தேசம்,உலகம் பற்றிய விழிப்புணர்வை பெற்று தன்
சொந்த கால்களில் நின்று குடும்பம் முதல் உலகம் ஈறாக பயன் பெறும்படி
வாழும்படி செய்யும் கல்வி முறையை அமல் செய்தல் . ஏதேனும் கோடை விடுமுறையை
இதற்கு பயன்படுத்தலாம். விடுமுறையில் ஒவ்வொரு மாணவனும் நதிகள் இணைப்பில்
பங்கேற்கும்படி செய்யலாம்.
7.கல்வி அளித்த நிறுவனமே மாணவர்களுக்கு வேலை வாய்ப்பும் வழங்கும் சட்டம்
8.கடல்களில்,நதிகளில், நீர் நிலைகளில் கழிவு நீரை விடும் தொழிற்சாலைகளுக்கு தடை .
9.மின் தேவைகளில் 50 சதம் சோலார்,விண்ட் மில்,பயோ கியாஸ் மூலம் மட்டுமே
சேகரிக்கும் ஏற்பாடு .
10.போலீஸ் துறையிலான காலியிடங்களை உடனடியாக நிரப்புவதோடு -மேலும் 2
மடங்கு வேலையிடங்களை ஏற்படுத்தி நிரப்பியாக வேண்டும். ஷிஃப்ட் முறை
கடுமையாக அமல். ஒவ்வொரு போலீஸ் ஸ்டேஷனிலும் சிசி கேமரா ஏற்பாடு +வெப்
காஸ்டிங்.
11.போலீஸ் துறை ஆரம்ப கட்ட விசாரணை எஃப்.ஐ.ஆர் போட்டு,ஆதாரங்களை
சேகரிப்பதோடு நின்றாக வேண்டும்.தண்டனை வாங்கிதர வேறு அமைப்பை ஏற்படுத்த
வேண்டும். இதுவும் ஷிஃப்ட் முறையில் 24 மணி நேரம் இயங்க
வேண்டும்.
என் யோசனைகள் பிடித்திருந்தால் நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க. இதுல எதுனா பிடிக்கலின்னா ஏன் பிடிக்கலன்னு கமெண்ட்ல சொல்லுங்க. திருத்திக்கறேன்


..com @ Rs.599

1 comments:

வணக்கம்.வலைப்பதிவர் விழாவிற்கு விழாக்குழு சார்பாக அன்புடன் வரவேற்கிறோம்.

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More