டிப்ஸ்: வெயில்கால வேர்குரு பிரச்சனைகளை தவிர்க்ககுழந்தைகளை வெயில் கால பிரச்சனைகளிலிருந்து காப்பாற்ற..

தினமும் இருமுறை குளிக்க வையுங்கள்.

முகம் கை, கால்களை அடிக்கடி கழுவ வேண்டும்.

விரல் நகங்களை கவனித்து வெட்டி விடுங்கள்.

குளித்து முடித்ததும் ஈரம் இல்லாதவாறு முழுவதும் துடைத்த பின்பு ஒரு சில நிமிடம் கழித்து தளர்வான ஆடைகளை அணிவியுங்கள்

தர்பூசணி, இளநீர், நுங்கு, நீர் மோர் போன்றவற்றை அதிகம் கொடுங்கள்.

சிறு புள்ளி, கொப்புளங்கள் கை, கழுத்து பகுதிகளில் காணப்பட்டால் கண்ட கிரீம்களை போடவோ, பயப்படவோ செய்யாதீர்கள். நுங்கு சாப்பிட்ட பின் அதன் பட்டையை (தோல்) மெதுவாக தேய்த்து விடுங்கள்.

குளிக்கும் நீரில் எழுமிச்சை சாரு விடலாம். வியர்வை பிரச்சனையை இது சரி செய்யும். (டெட்டால் ஒரு மூடி போடலாம்)

 துணிகளை நன்கு ஊற வைத்து துவையுங்கள். இருமுறை கசக்கி பிழிந்து காய விடுங்கள்.

வெயிலில் நேரடியாக சுற்றாதவாறு பார்த்துகொள்ளுங்கள். பலகீனமான குழந்தைகளுக்கு ஹீட் ஸ்ட்ரோக் வரவும் வாய்ப்பு இருக்கிறது.

குளிர்பணங்களை, ஐஸ் வகையாரக்களை தவிர்க்க முயலுங்கள்.

வீடுகளை நன்கு சுத்தமாக வையுங்கள். கொசுக்கள் இடுக்குகளில் முட்டைகளிட்டு பெருகும். வீனாக வைரஸ் காய்ச்சலை வரவைக்காதீர்கள்.

வரும் முன் காப்பதே சிறந்தது என்று இருங்கள்.
#அருணேஸ்

0 comments:

Post a Comment

உங்கள் மின்னஞ்சலை பதிவு செய்து புதிய செய்திகளை உடனடியாக அடையுங்கள்

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More