லாபம் தரும் தட்டுவடை செட் வியாபாரம்

தமிழ்நாட்டு பர்க்கர்ன்னு தாராளமா சொல்லுவாங்க "சேலம் தட்டு வடை செட் பற்றி  தெரிஞ்சவக..

மிக குறைந்த முதலீடே இதற்கு போதுமானது

அரிசி மாவால் செய்யப்பட்ட இரண்டு தட்டு வடைகளுக்கு நடுவில் வித விதமான சுவைகளில் இரண்டு அல்லது மூன்று சட்டினிகளை தடவி, பீட்ரூட், கேரட், வெங்காய துருவல்கள் சிலதை தூவி தட்டில் வைத்து கொடுப்பார்கள்.

அதை அப்படியே பானி பூரி சாப்பிடுவது போல வாயில் வைத்து கடிக்க வித விதமான சுவைகளை மாறி மாறி நாவு உணர.... அடடடா....
பெரிய மெனக்கெடல் என்று எதுவும் இல்லாமல் உங்களுக்கென்றே தனி சுவையில் உங்கள் தட்டுவடை செட் கடையை ஆரம்பியுங்கள்.

கூடவே மசால் பொறி, கார பொறி என துணைக்கு சேர்த்துக்கொள்ளுங்க..

மேக்சிமம் ஆயிரம் ரூபாய் முதலீடு போட்டால் போதும்.

ஒரு தட்டுக்கு மூன்று செட்டு தட்ட வடை கொடுக்கலாம். விலை ரூ.10

நல்ல வருமானம் தரும் தொழில்

1 comments:

vanakkam ungalai eppadi thodarpu kolvathu

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More